Saturday, January 31, 2026

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஹூப்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற 23ம் தேதி ஹூப்ளி-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற சிறப்பு ரயில்களின் விவரங்களையும், ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News