கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைத்துறை மைதானத்தில் 208.50 கோடி ரூபாய் செலவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மாதம் 25ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செம்மொழி பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், செம்மொழி வனம் உள்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் கொண்ட ரோஜா தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை செம்மொழிப் பூங்காவை பார்வையிட, இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக 15 ரூபாயும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
