சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018 க்கு இடையில், 156 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,300 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
அவருக்கு கடந்த மே மாதம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் அவரது தண்டனை உறுதி செய்யபட்டது.
இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.
