Saturday, December 20, 2025

‘துப்பாக்கி போன்ற உதடுகள்’., பத்திரிகை செயலாளர் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவார். இந்நிலையில், தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து டிரம்ப் பேசிய கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்து பேசிய டிரம்ப், “இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் உள்ளார்” என்று பேசினார்.

டிரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News