இலங்கையின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை Google Map புதுப்பித்திருப்பதாக அந்நாட்டு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் இந்த திட்டம் டிசம்பர் 31 வரை ஒரு முன்னோடி திட்டமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
மக்களின் பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
