புதுச்சேரி, ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு கேட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விரக்தியில், தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணக்குமார் தன்னை தொடர்ந்து ஏமாற்றியதாக குற்றம்சாட்டிய கனகராஜ், உயர்மின் கம்பத்தில் ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
