ஆந்திராவில் கவலையை ஏற்படுத்தி வரும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ மீது அரசு கவனம் செலுத்தியுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விரிவான ஆய்வுக்காக தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்ட ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது . ‘ஸ்க்ரப் டைபஸ்’ குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் சந்திரபாபு, சுகாதாரத் துறைக்கு முக்கிய பரிந்துரைகளை வழங்கினார்.
மாநிலம் முழுவதும் இதுவரை 1592 ‘ஸ்க்ரப் டைபஸ்’ வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தனர். அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் 420 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காரணமாக எந்த மரணமும் எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை
‘ஸ்க்ரப் டைபஸ்’ குறித்து மக்களிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
