தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளையே விரும்பி பயன்படுத்துகின்றனர். இது பல்வேறு பணிகளை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் செல்ல வேண்டிய அவசியமோ, சில்லறை பற்றிய கவலையோ இப்போது இல்லை. நாட்டில் பெரும்பாலான மக்கள் UPI மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், பீம் பேமெண்ட்ஸ் செயலி தனது பயனர்களுக்கு ஒரு சிறந்த செய்தியை அறிவித்துள்ளது.
தனது 9வது ஆண்டு விழாவையொட்டி ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் மூலம், பயனர்கள் தினசரி பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, மின்சாரக் கட்டணம் போன்ற அத்தியாவசிய செலவுகளிலும் கேஷ்பேக் பெறலாம். BHIM செயலி அறிவித்துள்ள இந்தச் சலுகையின் முக்கிய அம்சங்கள், கேஷ்பேக் எத்தனை நாட்கள் கிடைக்கும், 100% கேஷ்பேக் யாருக்கு கிடைக்கும் போன்ற விவரங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
கேஷ்பேக் பெறுவதற்கான விதிமுறைகள்
ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதத்தில் ஒருமுறை மட்டுமே இந்தச் சலுகையைப் பெறலாம்.
கேஷ்பேக் பெற குறைந்தபட்சம் ₹500 மதிப்புள்ள மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ₹50 வரை கேஷ்பேக் பெற முடியும்.
கேஷ்பேக் தொகை, BHIM செயலியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
BHIM கேஷ்பேக் சலுகையின் முக்கிய அம்சங்கள்
BHIM ஆப்பை பயன்படுத்தி ₹20 மற்றும் அதற்கு மேற்பட்ட உங்கள் முதல் பரிவர்த்தனைக்கு 100% கேஷ்பேக் கிடைக்கும்.
அதாவது, நீங்கள் செலுத்திய முழுத் தொகையும் உடனடியாக உங்கள் கணக்கிற்கு திரும்ப கிடைக்கும்.
மின் கட்டணம் செலுத்தும் போது பம்பர் கேஷ்பேக்
மாதாந்திர மின் கட்டணத்தை BHIM-ஐ பயன்படுத்தி செலுத்தினால் பிரத்தியேகமாக பம்பர் கேஷ்பேக் கிடைக்கிறது. இது குடும்பச் செலவுகளின் பாரத்தை குறைக்க உதவுகிறது.
வரையறுக்கப்பட்ட காலத்துக்கு மட்டும்
இந்தச் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க மக்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம்.
