PF பணத்தை எடுக்கப் போறீங்களா? இந்த லிமிட்டுக்கு மேல் எடுக்க முடியாது

பிஎஃப் பணத்தை அவசர தேவைகளுக்கு எடுப்பது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில முக்கிய விதிமுறைகளை வகுத்துள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 12 வருடங்கள் பணிபுரிந்திருந்தால், பிஎஃப் கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுக்க முடியும்.

வீடு வாங்குதல், மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற அவசர தேவைகளுக்காக பிஎஃப் தொகையை எடுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை விட்ட பிறகு, முழு பிஎஃப் தொகையையும் எடுக்கலாம்.

சில குறிப்பிட்ட தேவைகளுக்கான போதுமான சலுகைகளும் உள்ளன. உதாரணமாக, நோய், திருமணம், வீடு வாங்குதல் போன்ற சமயங்களில், பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் 100 சதவீதம் வரை எடுக்க முடியும். சிலசமயம் 75 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும். ஆனால், நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுப்பதற்கான அனுமதி உண்டு.

சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் படி, பிஎஃப் பணத்தை எடுப்பது முன்பைவிட எளிதாகியுள்ளது. 12 வருடங்கள் பணிபுரிந்திருந்தால், உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுக்க முடியும்.

நீங்கள் வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்களோ, அல்லது பழைய வீட்டை புதுப்பிக்க விரும்புகிறீர்களோ, பிஎஃப் கணக்கில் உள்ள தொகையில் 90 சதவீதம் வரை எடுக்க முடியும். உதாரணமாக, உங்கள் பிஎஃப் கணக்கில் 2 லட்சம் ரூபாய் இருந்தால், வீடு வாங்குவதற்காக 1,80,000 ரூபாய் வரை எடுக்க முடியும். அதேபோல், உங்கள் குடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால், சிகிச்சைக்காக, பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையில் 100 சதவீதத்தை எடுக்க முடியும். உங்கள் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணத்திற்காக 75 சதவீதம் வரை எடுக்க முடியும்.

நீங்கள் தற்போது வேலை செய்துவரும் நிறுவனத்தில் குறைந்தது 12 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையில் 75 சதவீதம் வரை எடுக்க முடியும். உதாரணமாக, உங்கள் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால், 75,000 ரூபாய் வரை எடுக்க முடியும்.

நீங்கள் வேலையை இழந்துவிட்டால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள முழு பணத்தையும் எடுக்க முடியும். சில நேரங்களில், இதற்கான காலக்கெடு 12 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றுவிட்டால், உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள முழு பணத்தையும் எடுக்க முடியும்.

Related News

Latest News