புதுச்சேரியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது, தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார். மேலும் த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருப்பதும் தெரியவந்தது. புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
இந்நிலையில், துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவர் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
