புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தவெக பொதுக்கூட்டம் முடிவடைந்து செவிலியர்கள் காரில் புறப்பட்ட போது, திடீரென பேனர் மற்றும் தகரம் சரிந்து விழுந்தது. இதில் காரின் முன் பக்கம் பேனர் விழுந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன்பின் 72 நாட்களுக்கு பிறகு, விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். சுமார் 12 நிமிடங்கள் உரையாற்றிய விஜய், பின்னர் விரைவாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். இதன்பின் தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து அங்கிருந்த மருத்துவக் குழுவினர் புறப்பட்டனர். அதில் செவிலியர்கள் புறப்பட்ட கார் பயணித்த போது, திடீரென பொதுக்கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தகரம் மற்றும் பேனர் சரிந்து விழுந்தது. காரின் முன் பகுதியில் பேனர் மற்றும் தகரம் விழுந்ததால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
