Monday, January 26, 2026

உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த சில நாட்களுக்குமுன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர்.

வீடியோவை வெளியிடமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டு சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வைபவ் (வயது 19), விஷால் (வயது 21) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related News

Latest News