ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 42). இவர் தெலுங்குதேசம் கட்சி தொண்டர். சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசரமாக சாப்பிட்டதாக தெரிகிறது. அந்தப்பழம் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
