புதுச்சேரியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருந்துகளின் தலைமையகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. (CBCID) போலீசார் நேற்று இரவு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 63 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பிரபல மருந்து நிறுவனமான சன் பார்மா, தங்கள் நிறுவன தயாரிப்பு மருந்துகள் புதுச்சேரியில் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மதுரையைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் (40) என்பவர், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளைத் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் புதுச்சேரி நகரின் மையப் பகுதியான செட்டித் தெருவில் இயங்கி வந்த போலி மருந்தகத்தின் தலைமையகமான “ஃபார்ம் ஹவுஸ்” மற்றும் “ஸ்ரீ சன் பார்மா” அலுவலகம் மற்றும் குடோன்களில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் உதவியுடன் சீல் வைத்தனர்.
