சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாலையில் விஐபி அமர்வில் கலந்து கொண்ட பல பிரமுகர்கள் மலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
