நாட்டின் மிகப்பெரிய பொத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் எனவும், கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் கீழே கூறப்பட்டுள்ளன:
பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.)
காலி பணி இடங்கள்: 996
பதவி பெயர்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (ஒப்பந்த அடிப்படை)
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு அல்லது முதுகலைப்படிப்பு. பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- 1-5-2025 அன்றைய தேதிப்படி
- வி.பி.வெல்த் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 26, அதிகபட்ச வயது: 42
- ஏ.வி.பி. வெல்த் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 23, அதிகபட்ச வயது: 35
- கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்சிகியூட்டிவ் பதவிக்கு குறைந்தபட்ச வயது: 20; அதிகபட்ச வயது: 35
அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 23-12-2025
இந்த வேலை வாய்ப்புக்கான விரிவான தகவல்களுக்கும் விண்ணப்பிக்கும் முகவரிக்கு இந்த இணைப்பில் சென்று பார்வையிடவும்:
https://sbi.bank.in/web/careers/current-openings
