கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்டவிதிமுறைகளை அறிமுகம் செய்தது. ஆனால் எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்த புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் விதிகளுக்கு இணங்க மறுத்த எக்ஸ் வலைத்தளம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் ஐரோப்பிய ஆணையம் அறிவித்து உள்ளது.
