இண்டிகோ விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வு விதிகளை நிறுத்திவைப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
இந்தியாவில் விமான சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சீராகும். நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவை திட்டமிடல்களும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த இரண்டு நாள்களில் முழுவதுமாக விமான சேவைகள் சீராகும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
