ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு, இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற பணிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தகவலறிந்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் நீதிமன்றத்தின் வளாகம் முழுவதும் சோதனைகள் மேற்கொண்டனர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
ஏற்கெனவே, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
