மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கணவரும், மிசோரம் மாநில முன்னாள் கவர்னருமான சுவராஜ் கவுஷல் தனது 73 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவில் முன்னணி அரசியல் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் செயல்பட்டவர் சுஷ்மா சுவராஜ். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 2014 முதல் 2019 வரை வெளிவிவகாரத் துறை அமைச்சராக செயல்பட்டார். இவரது கணவர் சுவராஜ் கவுசல் பிரபல சட்ட வல்லுநரும், மூத்த அரசியல்வாதியும் ஆவார். அதைத்தொடர்ந்து மிசோரம் மாநிலத்தின் கவர்னராக தனது 34 வயதிலேயே சுவராஜ் கவுசல் பணியாற்றி இருந்தார்.
2019 ஆம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் மறைந்ததை தொடர்ந்து தனது அரசியல் செயல்பாடுகளை அவர் குறைத்துக் கொண்டார். கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது. சுவராஜ் கவுசல் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
