Thursday, December 4, 2025

2025ல் அதிகம் தேடப்பட்ட AI எது தெரியுமா? தகவலை வெளியிட்ட கூகுள்

இந்தியாவின் 2025-ஆம் ஆண்டு டிஜிட்டல் ஆர்வத்தை Google வெளியிட்ட ‘Year in Search’ அறிக்கை தெளிவாக காட்டுகிறது. இவ்வாண்டு இந்தியர்களின் தேடல்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மையப்பகுதியை பிடித்துள்ளது. குறிப்பாக, Google-ன் சொந்த AI சாதனமான Gemini இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட AI கருவியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், பிரபலமாக இருந்த ChatGPT -யை ஜெமினி மிஞ்சி சென்றுள்ளது.

அறிக்கையில் ஜெமினி, 2025-இல் இந்தியாவில் மொத்தம் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில் இந்திய பிரீமியர் லீக்கிற்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜெமினி 2.5 Flash Image மாடலை அடிப்படையாகக் கொண்ட Nano Banana போன்ற வைரல் 3D மற்றும் saree-transformation டிரெண்ட்களும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன.

ஜெமினி மட்டும் அல்ல, Grok, Perplexity, DeepSeek ஆகியனவும் முன்னிலையில் உள்ளன. இந்த தகவல், AI இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையிலும் பணியிலும் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை காட்டுகிறது.

2025 ஆம் ஆண்டின் சிறந்த பிரபலமான தேடல்கள்

IPL

Google Gemini

Asia Cup

ICC Champions Trophy

Pro Kabbadi League

Maha Kumbh

Women’s World Cup

Grok

Saiyaara

Dharmendra

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News