ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஞ்சலி செலுத்தவந்த நடிகர் ரஜினிகாந்த், “தயாரிப்பாளர் சரவணன் ஒரு ஜெண்டில்மேன். சினிமாவை உயிராக நேசித்தவர். என் கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர். உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர். என் நலன்விரும்பி.
நான் ஏவிஎம் தயாரிப்பில் 9 திரைப்படங்களில் நடித்துள்ளேன். அனைத்தும் மிகப்பெரிய் ஹிட். அதில், சிவாஜி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இன்னொரு திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால், அதற்குள் இப்படியாகிவிட்டது. அவரது மறைவு என் மனதைப் பாதிக்கிறது” எனத் தெரிவித்தார்.
