பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படத்தில், இளையரஜா இசையமைப்பில் வெளியான பாடல்கள் இடப்பெற்றது. தனது அனுமதி இல்லாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் டியூட் தயாரிப்பு நிறுவனம் இளையராஜாவுக்கு ரூ. 50 லட்சம் வழங்கி, வழக்கை சமரசமாக்கிக் கொண்டனர். தொடர்ந்து, இளையராஜாவும் தன் பாடல்களைப் பயன்படுத்த அனுமதியும் வழங்கியுள்ளார்.
