பீகாரில் ரசகுல்லா பற்றாக்குறை காரணமாக திருமண நிகழ்ச்சியில் கலவரம் வெடித்தது. பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த ஒரு திருமணத்தில் ரசகுல்லா இனிப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டது.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
