Monday, December 1, 2025

திருமணத்தில் மாலை மாற்றியதும் காதலனுடன் ஓடிய மணப்பெண்

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், அஜய்ப்பூர் கிராமத்தில் உள்ள பூர்வா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்தனர். மணமகள் மற்றும் மணமகன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டனர். மாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு, அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்றனர்.

அடுத்து நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்காக மணமகளை அழைக்கும் போது, மணமகள் காணாமல் போயுள்ளார். அதன் பிறகு மணப்பெண் வேறு ஒரு இளைஞருடன் தப்பியிருப்பது தெரிய வந்தது. மணமகளின் தந்தை அந்த இளைஞரை மொபைலில் தொடர்பு கொண்டு பேசியபோது, தனது காதலனை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவருடனேயே வாழ விரும்புவதாகவும் மணமகள் தெரிவித்தார்.

இதனால் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News