ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னா (25). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காலில் ஏற்பட்ட விபத்துக்கு காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவருடைய கால் மோசமாக சேதமடைந்ததால், உள்ளே கம்பி செருகப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த மாதம், சின்னா காலில் உள்ள போல்ட்டை அகற்ற மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்போது, மருத்துவர்கள் அவருடைய காலில் ஒற்றை சிசேரியன் பிளேடு இருப்பதை கண்டுபிடித்தனர். இது அறிந்த உடனே மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுதான் கால்வலிக்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.
இதை கேட்ட அந்த நபர் கடும் அதிர்ச்சியடைந்தார். இதன் பின்னர், மருத்துவர்கள் மற்றொரு அறுவை சிகிச்சை செய்து பிளேட்டை அகற்றினர. தற்போது சின்னா நலமாக உள்ளார்.
இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
