உலகம் முழுவதும் பல கோடி பேர் வாட்ஸ் சேவையை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப் என்பது சமூக வலைத்தளங்களில் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இன்னொருபுறம் இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் அரங்கேறுவதாக புகார்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இனி இயங்காது.
மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல வெப்-இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். 6 மணி நேரம் கழித்து மீண்டும் கியூஆர் கோடு பயன்படுத்தி ஸ்கேன் செய்த பிறகுதான் வெப் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும்.
