Thursday, December 25, 2025

மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன் படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் ரூ.1,750-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

அதே போல, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

Related News

Latest News