Wednesday, December 24, 2025

டிசம்பர் மாதத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படும் அபாயம்., உடனே இதை செஞ்சு முடிங்க..!

டிசம்பர் 1 முதல் ஓய்வூதியம், உயிர்ப்புச் சான்று, எல்பிஜி விலை உள்ளிட்ட பல துறைகளில் விதிமுறைகள் வர உள்ளது. எந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் வரப்போகின்றன என்பதை கீழே சுருக்கமாக பார்ப்போம்.

யுபிஎஸ் திட்டம்

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) குறித்து ஒரு முக்கிய காலக்கெடு முடிவடைகிறது. இதில், தேசிய ஓய்வூதிய திட்டமான NPS-இலிருந்து UPS திட்டத்திற்கு மாற விரும்பும் மத்திய அரசு ஊழியர்கள், நவம்பர் 30க்குள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடு ஒரு முறை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், டிசம்பர் 1 க்குப் பிறகு மீண்டும் விண்ணப்பம் திறக்கப்படாது.

ஓய்வூதியர் அறிவிப்பு

கோடிக்கணக்கான ஓய்வூதியர்களுக்குவாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 தான் இதற்கான இறுதி தேதி. இந்தத் தேதிக்குள் உயிர்ப்புச் சான்று சமர்ப்பிக்காதவர்கள் டிசம்பர் மாதத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. அதனால், முதியோர் மற்றும் ஓய்வுபெற்றோர் தங்களின் உயிர்ப்புச் சான்றை நேரடியாகவோ, ஆன்லைன் முறையிலோ, ஜீவன் பிரமான் வழியாகவோ விரைவாக சமர்ப்பிக்கவும் வேண்டும்.

எல்பிஜி சிலிண்டர் விலை

எல்பிஜி சிலிண்டர் விலையும் டிசம்பர் 1 முதல் மாதாந்திர பரிசீலனைக்கு உட்படுகிறது. தற்போது எல்பிஜி விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் இருந்தாலும், உலக சந்தை அதிர்வுகளால் இந்த முறை சிறிய அளவில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

Related News

Latest News