Monday, December 1, 2025

கையில் வீச்சு அருவாளுடன் திமுக பிரமுகர் மகன் செய்த செயல்; வைரல் வீடியோ!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் சதிஷ். இவர் திமுக பிரமுகர் என்று சொல்லபடுகிறது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வரும் ஜான்சி இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

மேலும், சதிஷ் என்பவரும் ஜான்சியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஓரே வீட்டில் கடந்த 3ஆண்டுக்கு மேலாக கணவர் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக
கூறப்படுகின்றன.

இந்நிலையில் சதிஷிக்கும் ஜான்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜான்சி சதிஷை உதறிவிட்டு தனது தாயார் வீட்டில் வந்து விட்டார். ஆனால், சதிஷ் தொடர்ந்து ஜான்சியை குடும்ப நடத்த வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஜான்சி குடும்ப நடத்த வரமறுத்துள்ளதால் ஆத்திரமடைந்த சதிஷ் இரு தினங்களுக்கு முன் இரவு சினிமா பட பாணியில் தனது காரில் ஆரணி டவுன் வி.ஏ.கே நகரில் தாயார் வீட்டில் தங்கி இருந்த ஜான்சியை கையில் வீச்சு அருவாளுடன்
வீட்டின் வெளியே தரதரவென்று இழுத்து கொண்டு தனது காரில் ஏற்ற முயன்றுள்ளார்.

இதனை ஜான்சியின் உறவினர்கள் தடுத்த போது அவர்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றன. அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவமும் நடந்தேறியது.

இந்த வீடியோ தற்போது ஆரணி முழுவதும் சமூக வளைதலங்களில் வைரலாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து ஜான்சி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரணியில் வாலிபர் வீச்சு அருவாளுடன் சினிமா பட பாணியில் பெண்ணை தரதரவென்று இழுத்து செல்லும் வீடியோ வைரலாகிய சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News