Monday, December 1, 2025

டிசம்பர் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது..!

டிசம்பர் மாதத்தில், வழக்கமான வார இறுதி விடுமுறைகள் மற்றும் பல்வேறு மாநில விழாக்கள் காரணமாக வங்கிகள் மொத்தம் 13 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். எனவே உங்கள் வங்கி வேலைகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

டிசம்பர் வங்கி விடுமுறை

டிசம்பர் 1 (திங்கள்): மாநில ஸ்தாபக தினம். இட்டாநகர், கோஹிமாவில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 3 (புதன்): புனித பிரான்சிஸ் சேவியர் விழா. பனாஜியில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 12 (வெள்ளி): பா டோகன் நெங்மிஞ்சா சங்மா நினைவு தினம். ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 18 (வியாழன்): யு சோசோ தாம் நினைவு தினம். ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 19 (வெள்ளி): கோவா விடுதலை நாள். பனாஜியில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 20 (சனி): லோசூங்/நாம்சூங். கேங்டாக்கில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 22 (திங்கள்): லோசூங்/நாம்சூங். கேங்டாக்கில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 24 (புதன்): கிறிஸ்துமஸ் ஈவ். ஐஸ்வால், கோஹிமா, ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 25 (வியாழன்): கிறிஸ்துமஸ். நாடு முழுவதும் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 26 (வெள்ளி): கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். ஐஸ்வால், கோஹிமா, ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 27 (சனி): கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். கோஹிமாவில் மட்டும் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 30 (ஞாயிறு): யு கியாங் நங்பா நினைவு தினம். ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.

டிசம்பர் 31 (திங்கள்): புத்தாண்டு ஈவ். ஐஸ்வால் மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடல்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News