இஞ்சி – பூண்டு விழுது நம் அன்றாட சமையலில் முக்கிய இடம் வகிக்கிறது, குறிப்பாக பிரியாணி, புலாவ், அசைவ சமையல்களில் வாசனை, சுவை சேர்க்கும். ஆனால் தினமும் புதிதாக தயார் செய்வது சிரமம், குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு. எனவே பலர் கடைகளில் ரெடிமேட் பேஸ்ட் வாங்குகிறார்கள், ஆனால் அதன் பின்னால் ஏற்படும் ஆபத்துகளை பிரபல செஃப் தீனா விளக்குகிறார்.
இஞ்சியில் [ஜிஞ்சரால்] மற்றும் பூண்டில் [அல்லிசின்] என்ற மூலக்கூறுகள் இயற்கையாக வெளியிடப்பட்டு, சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இஞ்சி அஜீரணம், சளி, பருவநோய்களை சரிசெய்ய உதவும். பூண்டு கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும்.
ரெடிமேட் பேஸ்ட்டில் அதிக எண்ணெய், உப்பு, கெமிக்கல்கள் சேர்த்து பதப்படுத்துவதால், இஞ்சி-பூண்டின் இயல்புப் பண்புகள் அழிந்துவிடும். மைதா மற்றும் பிற பொருள்களைப் பயன்படுத்துவார்கள். அவை உடலில் நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வீட்டில் புது இஞ்சி, பூண்டு வாங்கி தயார் செய்தால், உப்பு-எண்ணெய் இன்றி அசல் சுவை, மருத்துவக் குணங்கள் முழுதாகப் பெறலாம். தினமும் செய்ய முடியாவிட்டால், வாரம் ஒரு நாள் அரைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒரு வாரம் பயன்படுத்தவும் என கூறியுள்ளார்.
