Monday, December 1, 2025

பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ செங்கோட்டையன் – அமைச்சர் ரகுபதி பேச்சு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் கடந்த சில நாட்களாக தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் அவருக்கு கட்சி பதவிகள் வழங்கப்பட்டன.

இது குறித்து அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் “பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்”. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர ஒரு குறிப்பிட்ட பணிக்காக அனுப்பப்பட்டவர். நீண்டகாலம் அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிய செங்கோட்டையன், பா.ஜ.க.வால் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறார். செங்கோட்டையனை நான் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாகவே பார்க்கிறேன். இது விரைவில் நிரூபிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News