2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 நகரங்கள் தொடர்பான தரவரிசையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட இந்த தரவரிசைப் பட்டியல், ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.
அதாவது, பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
மேலும், சுமார் 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களை மதிப்பீடு செய்து இந்தப் பட்டியலை வெளியிடுகிறது.
இந்த ஆய்வின்படி, இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரம், தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்திலும், நியூயார்க், 3-வது இடத்திலும், பாரிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் இருந்து பெங்களூரு 29-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும், டெல்லி 54-வது இடத்திலும், ஐதராபாத் 82-வது இடம் பிடித்துள்ளது.
தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, பெரு நிறுவன தளங்கள் விரிவுபடுத்தப்படுவது போன்றவற்றுக்காக பெங்களூரு நகரத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
