மத்திய அரசு ஆதரவுடன் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) செயல்படுத்தும் இந்தத் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்குகிறது. மருத்துவ பரிசோதனை இன்றி இணையலாம். முதிர்வு காலம் 10 ஆண்டுகள். ஆண்டுக்கு ரூ.60,000 வரை பெறலாம்.
யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும்?
இந்த திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 60 ஆகும். ஆனால், அதிகபட்ச வயது வரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது, 60 வயதை கடந்த இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து பயன் பெறலாம்.
இந்த திட்டத்தில் சேர விரும்புவோர், தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்கிறீர்களோ, அதற்கேற்ப உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை மாறுபடும்.
ஓய்வூதிய தொகையை மாதந்தோறும், காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என தங்களின் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
அவசர தேவைகளுக்காக பணப்பற்றாக்குறை ஏற்பட்டால் கவலைப்பட தேவையில்லை. இந்த திட்டத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, நீங்கள் செலுத்திய முதலீட்டு தொகையில் 75 சதவீதம் வரை கடன் பெறும் வசதியும் உள்ளது.
ஒருவேளை திட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினாலும், மீதமுள்ள கடன் தொகை கழிக்கப்பட்டு மீதிப்பணம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள எல்ஐசி கிளை அல்லது முகவரை அணுகி இந்தத் திட்டத்தில் இணையலாம்.
