இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 67 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியாவில், பருவமழை தீவிரமடைந்து சுமத்ரா தீவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 67 பேரைக் காணவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமத்ரா தீவின் ஆச்சே மற்றும் மேற்கு சுமத்ரா ஆகிய மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
