Saturday, February 21, 2026

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! இலங்கை கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 எனப் பதிவாகியுள்ளது. சுமார் 7 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளது.

Related News

Latest News