துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் சாகச நிகழ்ச்சியின் போது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்தார்.
குறைந்த உயரத்தில் சுழன்று சாகசம் செய்தபோது விமானம் போதிய வேகம் இல்லாமல் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது.
தேஜஸ் விமானத்தில் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன; எஞ்சின், ரேடார் போன்றவை இறக்குமதி. 6500 கிலோ எடை கொண்டு, 460 மீட்டர் ஓடுபாதையில் டேக்ஆஃப் செய்யும் திறன் உடையது.
இந்த விபத்தால் அர்மீனியாவுடனான 12 விமானங்கள் (சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பு) வாங்கும் பேச்சுவார்த்தை பாதியில் நிறுத்தப்பட்டதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. இருப்பினும், அர்மீனியா அல்லது இந்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வரவில்லை.
