Monday, December 1, 2025

பள்ளிக்கு சென்ற ஆசிரியையை கத்தியால் குத்திய காதலன் கைது

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே மேல களக்கூடிய சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரும் அதே ஊரில் அவரது சமூகத்தை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார் (29) என்பவரும் கடத்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் வற்புறுத்தலின்படி அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த விபரத்தை காவியா அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்து உள்ளார்.

இதே போல் நேற்று இரவு 8 மணிக்கு இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு காவியா காட்டியுள்ளார். இதனால் அஜித் குமார் கோபத்தில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை காவியா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அவரை வழி மறித்த அஜித்குமார் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காவியா அதே இடத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காவியாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News