தவெக தலைவர் விஜய் இல்லத்திற்கு சென்ற செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இன்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமை செயலகம் சென்ற அவர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இல்லத்திற்கு செங்கோட்டையன் சென்றுள்ளார். இதனால் செங்கோட்டையன் தவெக- வில் இணைவது உறுதி ஆகியுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News