முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமை செயலகம் சென்ற அவர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது செங்கோட்டையன் தவெகவில் இணையப்போவதாக தகவல் பரவி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
