திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லேகம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருபவர் அக்பர் பாஷா – அர்ஷியா தம்பதியினர்.அக்பர் பாஷா தனியார் தொழிற்சாலையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஒரு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அர்ஃபலா பாத்திமா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் வீட்டில் இருந்த அர்ஃபலா பாத்திமா என்ற பெண் குழந்தை திடீரென காணாமல போனதாக கூறி பெற்றோர்கள் குழந்தையை வீட்டில் தேடி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த பெண் குழந்தை வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாக சொல்லப்பட்டது.
உடனடியாக குழந்தையின் உறவினர்கள் குழந்தையை, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலிசார் மேல்மாடியில் வசிக்கும் குழந்தை, நடக்க கூட முடியாத நிலையில் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது என சந்தேகித்தின் பேரில் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்மாடியில் இருந்த குழந்தை, நடக்க கூட முடியாத அந்த 3 மாத பெண் குழந்தை தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது என்ற சந்தேகித்தின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடம் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தாய் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
குழந்தையின் தாய் அர்ஷியாவை காவல் நிலையத்தில் வைத்து நடத்திய தீவிர விசாரணையில் நடத்தியாயத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில், ஏற்கனவே தனக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3 வது குழந்தையை பராமரிக்க முடியாமல் தொந்தரவாகவும், சரியாக தூக்கம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததால் தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி கொலை செய்ததாக கூறியுள்ளார். குழந்தையின் தாய் கொடுத்த வாக்குமூலம் போலீசாரையே அதிரவைத்தது.
இதையடுத்து போலீசார் அர்ஷியா தஸ்லீம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது சிறையில் அடைத்தனர்.
பிறந்து மூன்று மாதங்களை ஆன பிஞ்சு குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் ஆம்பூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
