புதுச்சேரி பூமியான்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக உள்ளார். விடுதியின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து தள்ளிச் சென்றனர்.
இதை அறிந்த விக்னேஷ் கத்தி கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் இளைஞர்கள் இருவரையும் தர்ம அடி கொடுத்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், மல்லரசன் குப்பத்தை சேர்ந்த அஜித் என்பதும் மதுபோதையில், இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்றதும் தெரியவந்தது. இதை அடுத்து இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
