Monday, December 22, 2025

தேர்தலுக்கு யாருடன் கூட்டணி? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் டிசம்பர் 30-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்க உள்ளோம். பொதுக்குழுவில் கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.

Related News

Latest News