Monday, December 1, 2025

போலீசார் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த 17 பேர் கைது

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி நகரின் பல இடங்களில் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் இந்தியா கேட் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் செல்வது தடைபட்டுள்ளதால் அவற்றுக்கு வழிவிடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு போராட்டக்காரர்கள் நகர மறுத்ததால் அவர்களை போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிலர் போலீசார் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்ததாக கூறப்படுகிறது. இதில் 4 போலீசாருக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து போராட்டக்கார்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News