Thursday, December 25, 2025

கல்விக்கடன் பெற அருமையான வாய்ப்பு., மிஸ் பண்ணிடாதீங்க..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் நாளை (26-11-2025) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது.

கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் தேவைப்படும் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • விண்ணப்ப நகல்
  • மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம்,
  • வங்கிக்கணக்கு புத்தகம்,
  • ஆண்டு வருமான சான்று,
  • சாதிசான்று,
  • பான்கார்டு,
  • ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்
  • கல்விக்கட்டண விவரம்,
  • 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள்,
  • முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை போன்ற ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

Related News

Latest News