Monday, December 1, 2025

கணவரை கொன்றுவிட்டு 7 ஆண்டுகளாக நாடகமாடிய பெண் கைது

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கன்னி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. இவரது மனைவி சாந்தாபாய். சாந்தபாய்க்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதை அறிந்த பீரப்பா கள்ளக்காதலை சாந்தாபாயை கண்டித்தார். இதனால் கோபமடைந்த சாந்தாபாய் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். பின்னர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடி அனைவரையும் நம்ம வைத்துள்ளார்.

இந்தநிலையில் கூலிப்படையினருக்கு, சாந்தாபாய் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் சாந்தாபாயிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இது தொடர்பான ஆடியோ வெளியானதால் பீரப்பாவின் குடும்பத்தினர் இதுகுறித்து கலபுரகி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தாபாயை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாந்தாபாயை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படையினரான மகேஷ், சுரேஷ், சித்து மற்றும் சங்கர் ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்தனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பின்பு அது வெளிச்சத்துக்கு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News