ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. குறிப்பாக அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என கூறியுள்ளார். அஜித்தின் புதுப்பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
