Monday, January 26, 2026

பிறந்த நாள் நெருங்கும் நேரத்தில் சோகம் : நடிகர் தர்மேந்திரா காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (வயது 89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் நடிகர் தர்மேந்திரா.

கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை மோசமானதால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள் தொடங்கி, குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த வாரத்தில் தர்மேந்திரா தனது 90வது பிறந்தநாளை, அதாவது டிசம்பர் 8ஆம் தேதி கொண்டாட இருந்த நிலையில் அவரது மரணம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related News

Latest News