Monday, January 26, 2026

கார் விபத்தில் சிக்கி பிரபல பாடகர் மரணம்

பிரபல பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து (37) கார் விபத்தில் உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்துவிட்டு, நவம்பர் 21 அன்று இரவு 12 மணியளவில் தனது சொந்த ஊரான கியாலாவுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் லாரி மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலிசார் விரைந்தனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related News

Latest News